என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆதிகும்பேஸ்வரர் கோவில்"
- தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார்.
- பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் மாசிமக தீர்த்தவாரி தலங்களில் சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் யானை ஒன்று உள்ளது. இந்த யானைக்கு மங்களம் என பெயர் சூட்டி உள்ளனர். இந்த யானை கடந்த 1982-ம் ஆண்டு காஞ்சி மகா பெரியவரால் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த யானைக்கு 58 வயதாகிறது.
வயது அதிகமாவதை போல யானையின் சுட்டித்தனமும் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களை வெகுவாக கவர்ந்திழுக்கும் யானை மங்களத்துக்கு சளி தொந்தரவு உள்ளது. இதனால் யானை தமிழக அரசின் சிறப்பு புத்துணர்வு முகாமிற்கு செல்வதில்லை. சிறப்பு புத்துணர்வு முகாமில் வழங்கப்படும் உணவு, மூலிகை மருந்துகள், உடற்பயிற்சிகள் கோவில் வளாகத்திலேயே யானைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
வெயில் சுட்டெரித்து வருவதால், பாகன் அசோக்குமார் தினமும் யானை மங்களத்தை பிரத்யேக குளியல் தொட்டிக்கு அழைத்து சென்று குளிக்க வைத்து வருகிறார். அதன்படி, வழக்கம்போல் யானை மங்களம் குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டது. தொட்டியில் இறங்கிய யானை மங்களம் சுமார் ஒரு மணிநேரம், துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சியும், இதனை வேடிக்கை பார்த்த பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஆனந்த குளியல் போட்டது.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யானையின் இந்த குதூகலமான குளியலை கண்டு மனம் நெகிழ்ந்து உற்சாகம் அடைந்தனர்.
மேலும், சிலர் இதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.
- இன்று முதல் கால யாக சாலை பூஜை நடக்கிறது.
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிகும்பேஸ்வரர் மங்களாம்பிகை அம்பாளுடன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்தக்கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 5-ந்தேதி குடமுழுக்கு நடந்தது.
இந்தநிலையில் மீண்டும் கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்காக அரசு மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் ரூ.8 கோடியில் திருப்பணி தொடங்க முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை மகா கணபதி, மகாலட்சுமி, நவக்கிரக ஹோமங்கள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பாலாலய சிறப்பு யாகம் நடந்தது.
இன்று(சனிக்கிழமை) முதல் கால யாக சாலை பூஜைகளும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) 2, 3-ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. வருகிற 27-ந்தேதி 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கி, யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு, அத்திமரத்தில் வரையப்பட்ட 27 விமான சித்ர படத்துக்கு கலசாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சு.சாந்தா, செயல் அலுவலர் கோ.கிருஷ்ணகுமார் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
- கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் மகாமக விழா உலக அளவில் பிரசித்திப்பெற்றதாகும்.
இந்த கோவிலில் மந்திர பீடேஸ்வரி என்கிற மங்களாம்பிகை அம்பாளுடன் ஆதி கும்பேஸ்வர சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமையான இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவில் விமான பாலாலய விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யா யாகவாசனம், கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 25-ந் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
26-ந் தேதி 3-ம் கால யாகசாலை பூஜைகளும், 27-ந் தேதி நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விமான பாலாலய விழா குழுவினர் மற்றும் மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் பழமை வாய்ந்த சிலைகள் மாயமானதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மாயமான சிலைகளை கண்டு பிடிக்கவும், சிலைகளின் தன்மைகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். சிலைகள் கடத்தலில் தீனதயாளன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்பட 10 பேரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷா பங்களா வீட்டில் பூமிக்கடியில் புதைக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த சிலைகளை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கடந்த மாதம் தஞ்சை பெரிய கோவில் மற்றும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தொல்லியல் துறையினர் உதவியுடன் சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். இந்த கோவில்களில் இருந்த சிலைகளின் உலோக தன்மை, உயரம், எடை ஆகியவை ஆவணங்கள் படி சரியாக உள்ளதா? என்று நவீன கருவிகள் மூலம் சோதித்தனர். போலி சிலைகள் ஏதும் வைக்கப்பட்டுள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பொன். மாணிக்கவேல் இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வுபெறுகிறார். இதனால் அவர் இதுவரை சிலைகள் கடத்தல் வழக்கில் மேற்கொண்ட விசாரணை என்னவாகும்? என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொன். மாணிக்கவேலுக்கு , பதவியை நீடித்து ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கையும் விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை 7.30 மணியளவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருடன் வந்தார்.
பின்னர் தன்னுடன் வந்த போலீசாரை வெளியே நிற்குமாறு கூறிவிட்டு அவர் மட்டும் தனியாக கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலில் இருந்த ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை சிலை, மற்றும் நாயன்மார்கள் சிலை, விநாயகர்சிலை, பஞ்சமூர்த்தி சிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவில் ஊழியர்களிடமும் சிலைகள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார்.
சுமார் ஒருமணிநேரம் கோவில்களில் உள்ள சிலைகளை அவர் ஆய்வு செய்து விட்டு வெளியே வந்தார்.
கும்பகோணம் கோவிலில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #IGPonManickavel
சம்பந்தர் இந்த அன்னையை ‘வளர்மங்கை’ என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப்போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார்.
அம்பாளுக்கென 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக ‘மந்திரபீடேஸ்வரி’ என்ற திருநாமமும் பெறுகிறாள். அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம் முதன்மையானதாக கருதப்படுகிறது.
மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதனையடுத்து நேற்று மாலை மாற்றும் நிகழ்ச்சியும், ஊஞ்சல் உற்சவமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 12 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு திருமண மறைசடங்கு நிகழ்ச்சியும், சாமி வீதி உலாவும் நடைபெற்றது.
வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) வரை ஊஞ்சல் உற்சவமும், 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பகவத் படித்துறையில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. 30-ந்தேதி (புதன்கிழமை) மகா சுத்தாபிஷேகத்துடன் விழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
25-ந்தேதி காலை 10.15 மணிக்கு மாலை மாற்றுதலும், 11 மணிக்கு ஊஞ்சலடி உற்சவமும், 12 மணி முதல் 1 மணிக்குள் மங்களாம்பிகை அம்மனுக்கும், ஆதிகும்பேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 29-ந்தேதி காலை 10.45 மணிக்கு மேல் 12 மணிக்குள் பகவத் படித்துறையில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து சாமி, அம்மன் சங்கரமடத்தில் எழுந்தருளுகின்றனர். 30-ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்